ETV Bharat / state

திருப்பத்தூர் லாரி விபத்தில் 2 பேர் காயம்; ஸ்தம்பித்துப்போன தேசிய நெடுஞ்சாலை! - பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலை

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே பாரம் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். விபத்தால் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

lorry
lorry
author img

By

Published : Aug 10, 2020, 2:29 AM IST

ஈரோடு பகுதியைச் சேர்ந்த ஓட்டுநரான கணேசன் என்பவர், ஈரோட்டில் இருந்து லாரியில் ஜவுளி துணிகளை ஏற்றிக்கொண்டு, ஆந்திர மாநிலம் கிச்சாபுரம் என்ற இடத்திற்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில் லாரி திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புத்துக்கோயில் என்ற இடத்தில் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது, லாரியில் அதிக பாரம் ஏற்றி வந்ததால் கட்டுப்பாட்டை இழந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

tripattur bangalore chennai highway jammed in lorry accident and 2 injured
விபத்தில் கவிழ்ந்த லாரி

இந்த விபத்தில் ஓட்டுநர் கணேசன், உடன் பயணம் செய்த கிளீனர் இருவரும் காயம் அடைந்தனர். பின்னர் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவர்கள், அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

லாரி, பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலை நடுவில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதால் பெங்களூரு - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டது. தகவலறிந்து அம்பலூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இரண்டு மணி நேரத்திற்கும் மேல் போராடி கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தி பின்னர் போக்குவரத்தை சீர் செய்தனர்.

கிரேன் மூலம் லாரியை அப்புறப்படுத்தினர்

இதையும் படிங்க: கார் மோதி தூக்கி வீசப்பட்ட தாய், மகன் - சிசிடிவி காட்சி வெளியீடு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.