திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு ரேஷன் அரிசி கடத்துவது தொடர் கதையாக உள்ளது.
இந்நிலையில் வாணியம்பாடி ரயில் நிலையத்தில் உடமைகள் எடுத்து செல்வது போல் சுமார் 53 மூட்டைகளில் ரேஷன் அரிசி வெளி மாநிலத்திற்கு ரயிலில் கடத்த பதுக்கி வைத்து இருப்பது குறித்து ரகசிய தகவல் வாணியம்பாடி வட்டாட்சியருக்கு கிடைத்தது.
இந்தத் தகவலின் பேரில் வட்டாட்சியர் மோகன் தலைமையிலான வருவாய்த்துறையினர் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கே வெளி மாநிலத்திற்கு கடத்த 53 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த சுமார் 2 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
இந்த நிலையில், வருவாய்த்துறையினர் வருவதை அறிந்த ரேஷன் அரிசி கடத்தல் கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்தச் சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.