தமிழ்நாடு முழுவதும் கரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. அதனைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சி பகுதிகளில் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத பொதுமக்களிடம் இருந்து 200 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இருப்பினும் வாணியம்பாடி நகர் பகுதிகளான வார சந்தை, உழவர் சந்தை உள்ளிட்ட இடங்களில் முகக்கவசம் அணியாமல் பொதுமக்கள் அலட்சியமாக உள்ளனர்.
இதனால் அப்பகுதிகளில் கரோனா தொற்று அதிகமாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இளைஞருக்கு அடி உதை... முகக்கவசம் அணியாததால் போலீஸ் சரமாரி தாக்குதல்!