திருப்பத்தூர்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் துறையினர் சட்டங்களை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக மூத்த வழக்கறிஞர் எஸ்.எஸ்.மணியன் ஏற்பாட்டில் புதிய மினி நூலகத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய காவல் கண்காணிப்பாளர், "தமிழ்நாட்டில், அரசின் சார்பில் அனைத்து காவல் நிலையங்களிலும் புத்தகங்கள் வாங்க நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள இந்த நூலகம் மூலம் காவல் துறையினர் சட்டங்களை படித்து பொதுமக்களிடம் பெறும் புகார்களுக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து சிறந்த காவலராக இருக்க முடியும்” என்றார். தொடர்ந்து, இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளும்படி காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்ட தனிப்பிரிவு காவல் ஆய்வாளர் பழனி, திருப்பத்தூர் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேல் உள்ளிட்ட ஏராளமான காவல் துறையினர் கலந்துகொண்டனர்
இதையும் படிங்க: உலக நன்மைக்காக கோயம்புத்தூரில் அரங்கேறிய நூதன திருமணம்!