உலகை உலுக்கும் கரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் 21 நாள்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியேறுவதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் மாநகராட்சி, ஊராட்சிகளில் கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்டுவருகிறது.
இதற்கிடையில், திருப்பத்தூர் மாவட்டம் அனேரி கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில அமைப்பு செயலாளராக உள்ள ஏ.பி.சிவா என்பவர் இயற்கையான கிருமிநாசினிகளை தண்ணீர் கொண்டுச் செல்லும் டிராக்டரில் கலந்து அதனை இலவசமாக கிராமம் முழுவதும் தெளித்துவருகிறார். அதன் காரணமாக அப்பகுதி மக்கள் அவரைப் பாராட்டிவருகின்றனர்.
இதையும் படிங்க: 'டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர்'