திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான பண்ணை வீடு உள்ளது.
இதனை திருவண்ணாமலை மாவட்டம் காந்தூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பராமரித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஏப்ரல். 11) இரவு அடையாளம் தெரியாத நபர்கள் பண்ணை வீட்டிற்குள் நுழைந்து கொள்ளை அடிக்க முயற்சித்தனர்.
ஆனால் பணம், நகை எதுவும் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து அங்கிருந்த சிசிடிவி கேமராவின் பதிவுகளை அவர்கள் அழித்துவிட்டு சென்றனர்.
இன்று (ஏப்ரல். 12) அதிகாலை இச்சம்பவம் பிரேம்குமார், அவரது மனைவி சங்சீதாவுக்கு தெரியவந்தது. உடனே ஏலகிரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் லட்சுமி, காவல் உதவி ஆய்வாளர் தங்கராஜ் ஆகியோர் தடயங்களை சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஓய்வுபெற்ற எல்ஐசி மேலாளர் வீட்டில் திருட்டு!