தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கைலாசபுரத்தில் புதிதாகக் கட்டபட்டுள்ள ஜெபமாலை அன்னை ஆலயம் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக கல்லத்திக்கிணறு கிராமத்தில் இருந்து வேனில் 30க்கும் மேற்பட்டவர்கள் சென்றனர். இந்நிலையில், வேன் நாரைக்கிணறு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில் கன்னிமேரி, சந்திரா என்ற இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த ஜஸ்டினா, சகாயபிரபு, ஜெபமாலை, செல்லத்தாய் உள்பட 13 பேர் பாளையாங்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஓட்டப்பிடாரம் தொகுதி எம்எல்ஏ சண்முகையா, காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்து மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை அளிக்கும்படி கேட்டுக்கொண்டார்.
மேலும், நாரைக்கிணறு காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.