ETV Bharat / state

'திமுக வென்றுவிடும் என்கிற பயத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்தவில்லை..!' - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்

தூத்துக்குடி: "திமுக வென்றுவிடுமோ என்கிற அச்சத்தில், அதிமுக அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளது" என, உதயநிதி ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

udhayanithi stalin, grama saba meeting, dmk, village
author img

By

Published : Feb 5, 2019, 5:13 PM IST

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. திமுக தலைவர் ஸ்டாலின் உட்பட பல்வேறு திமுக அமைச்சர்களும் மற்றும் கழக நிர்வாகிகளும் இந்த கூட்டத்தில் பங்குபெற்று மக்களின் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.

அந்த வகையில் கடந்த ஜனவரி மாதம் தூத்துக்குடி மாவட்டத்தில் நடந்த கூட்டத்தில் கனிமொழி கலந்து கொண்டார். தற்போது திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். அவரிடம் அப்பகுதி மக்கள் பல்வேறு குறைகளை முன்வைத்தனர்.

குறிப்பாக சாலை வசதி, போக்குவரத்து, மருத்துவமனை, வேலைவாய்ப்பு, மின்பாதை சீரமைத்தல், குடிநீர் வினியோகம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என புகார்களை அடுக்கினர்.

மேலும் அப்பகுதி பொதுமக்கள், எல்லா தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளுக்கு திமுக தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். ஆனால் தேவேந்திர குல சமுதாய தலைவர் சிலைகளுக்கு திமுக மரியாதை செலுத்துவது இல்லை. மற்ற தலைவர்கள் போல் எங்கள் தலைவர்களுக்கும் திமுகவினர் மரியாதை செலுத்த வேண்டும். அதற்கு நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இதேபோல் தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் குறிப்பிட்ட 7 பிரிவினரை தனியே பிரித்து பழங்குடியினர் பட்டியலில் இருந்து வெளியேற்ற சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் திமுக ஆதரவளிக்க வேண்டும் என்றும் ஓட்டப்பிடாரம் தொகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.

undefined
கிராம சபை கூட்டம் , ஊராட்சி சபை கூட்டம் , உதயநிதி ஸ்டாலின்
ஊராட்சி சபை கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின்
undefined

மக்கள் தெரிவித்த குறைகளை கேட்ட பின்னர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், " இங்கு சொல்லப்பட்ட பெரும்பாலான பிரச்னைகள் உள்ளாட்சி அமைப்பால் தீர்க்கப்பட வேண்டியவை. பஞ்சாயத்து அமைப்பு சரியாக இருந்திருந்தால் இந்த பிரச்னைகள் ஏற்பட்டு இருக்காது. 4 வருடத்துக்கு முன் நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் எங்கே திமுக வென்றுவிடுமோ என்ற அச்சத்தில் தான் தேர்தலை நடத்தாமல் உள்ளது இந்த அரசு. விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும்" என்று நம்பிக்கை அளித்தார்.

தமிழகம் முழுவதும் திமுக சார்பில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
அதன் பொருட்டு திமுக நட்சத்திர பேச்சாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் அந்தந்த பகுதிகளில் நடைபெறும் ஊராட்சி சபை கூட்டங்களில் கலந்துகொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகின்றனர்.

அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் கனிமொழி எம்பி தலைமையில் ஊராட்சி சபை கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் கேட்டறியப்பட்டன.

இந்தநிலையில் நடிகரும் தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலினின் மகனுமான உதயநிதி ஸ்டாலின் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊராட்சி சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு மக்களிடையே குறைகளை கேட்டறிந்தார்.

இதில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பொதுமக்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். குறிப்பாக சாலை வசதி, போக்குவரத்து, மருத்துவமனை, வேலைவாய்ப்பு, மின்பாதை சீரமைத்தல், குடிநீர் வினியோகம் மற்றும் இதர அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என உதயநிதி ஸ்டாலினிடம் பொதுமக்கள் முறையிட்டனர்.

தொடர்ந்து தேவேந்திர குல வேளாளர் சமூகத்தில் குறிப்பிட்ட 7 பிரிவினரை தனியே பிரித்து பழங்குடியினர் பட்டியலில் இருந்து வெளியேற்ற வேண்டும், அதற்கு சட்ட மன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் திமுக ஆதரவளிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். மதுரையில் உள்ள விமான நிலையத்துக்கு தேவர் பெயரை சூட்ட வேண்டும் என திமுக வலியுறுத்தி வருகிறது. எல்லா  தலைவர்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளுக்கு திமுக தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துகின்றனர். ஆனால் தேவேந்திர குல சமுதாய தலைவர் சிலைகளுக்கு திமுக மரியாதை செலுத்துவது இல்லை. மற்ற தலைவர்கள் போல் எங்கள் தலைவர்களுக்கும் திமுகவினர் மரியாதை செலுத்த வேண்டும். அதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும் என கூறினர்.

தொடர்ந்து பேசிய பொதுமக்கள் உப்பு நீரால் கிட்னி பாதிப்படைந்து சமீப காலமாக முடிவைதனேந்தல் பகுதியில் இறப்பு அதிகமாக உள்ளது. எனவே தாமிரபரணி குடிநீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  

இதைதொடர்ந்து பொதுமக்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசிய உதயநிதி ஸ்டாலின்,
இங்கு சொல்லப்பட்ட பெரும்பாலான பிரச்சனைகள் உள்ளாட்சி அமைப்பால் தீர்க்கப்பட வேண்டியவை. பஞ்சாயத்து அமைப்பு சரியாக இருந்திருந்தால் இந்த பிரச்சனைகள் ஏற்பட்டு இருக்காது.

4 வருடத்துக்கு முன் நடத்த வேண்டிய உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் எங்கே திமுக வென்றுவிடுமோ என்ற அச்சத்தில் தான் தேர்தலை நடத்தாமல் உள்ளது இந்த அரசு. விரைவில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும். அப்போது மக்கள் பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கப்படும் என கூறினார்.

Video editing process going on..
It will Send soon through reporter app.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.