ETV Bharat / state

காய்கறி கடைக்காரர் வீட்டில் 1 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடித்த இருவர் கைது!

author img

By

Published : Sep 1, 2020, 9:41 PM IST

தூத்துக்குடி: காய்கறி கடைக்காரர் வீட்டில் கொள்ளையடித்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.

காய்கறி கடைக்காரர் வீட்டில் 1 லட்சத்து 80 ஆயிரம் கொள்ளையடித்த இருவர் கைது

தூத்துக்குடி தெற்கு புதுத்தெருவை சேர்ந்தவர் பொன்பாண்டி (வயது 60). காய்கறி கடை நடத்தி வரும் இவர் தனது குடும்பத்தினருடன் கடந்த 25ஆம் தேதி சேர்வைகாரன் மடத்தில் கோயில் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள குடும்பத்துடன் சென்றுவிட்டு மறுநாள் அவர் வீடு திரும்பினார்கள்.

இந்நிலையில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு வீட்டில் இருந்த 52 இன்ச் எல்இடி டிவி, வெள்ளி காமாட்சி விளக்கு 3, சிறிய பித்தளை விளக்கு, குத்து விளக்கு, கண் கண்ணாடி, லேப்டாப் மற்றும் 8 ஆயிரம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து மத்திய பாகம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் தூத்துக்குடி மேலூர் பங்களா தெருவை சேர்ந்த நாகராஜன்(40) என்பவர் கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது.

நாகராஜனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் கொள்ளையில் அவருக்கு உதவியாக செயல்பட்டது தூத்துக்குடி ரஹ்மத்துல்லாபுரத்தைச் சேர்ந்த பூக்கடை நடத்தி வரும் முருகன் (40) என்பதும் அவர் தான் பொன் பாண்டியின் வீட்டில் ஆள் இல்லாதது குறித்து நாகராஜனுக்கு தகவல் சொல்லி கொள்ளைக்கு துணை போனதும் தெரியவந்தது. தொடர்ந்து முருகனையும் காவல்துறையினர் கைது செய்து விசாரித்ததில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

பொன்பாண்டி வீட்டிற்கு பூஜைக்கு தேவையான பூக்களை முருகனிடம் வழக்கமாக வாங்கி வந்துள்ளார். வழக்கம்போல 25ஆம் தேதியன்றும் கோயில் நிகழ்ச்சிக்கு தேவையான பூக்களை முருகனிடம் பெற்றுக்கொண்டு சேர்வைக்காரன்மடத்துக்கு பொன்பாண்டி குடும்பத்துடன் சென்றுள்ளார்.

இதைவைத்து வீட்டில் ஆள் இல்லாததை உறுதி செய்து கொண்ட முருகன், நாகராஜனுக்கு தகவல் சொல்லி பொன்பாண்டியின் வீட்டில் கொள்ளையை அரங்கேற்றியது அம்பலமானது. இதைதொடர்ந்து கொள்ளையடிக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.