ETV Bharat / state

தூத்துக்குடியில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி

தூத்துக்குடி: தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி ஜூலை 17ம் தேதி தொடங்கி ஜூலை 21ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி
author img

By

Published : Jul 16, 2019, 12:07 AM IST

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி சார்பாக சுழற்கோப்பைக்கான கூடைப்பந்து போட்டி தேசிய அளவில் கல்லூரிகளுக்கு இடையே ஜூலை 17ஆம் தேதி தொடங்கி ஜூலை 21ம் தேதி வரை தூத்துக்குடியில் நடைபெற உள்ளது.

இது குறித்து கூடைப்பந்து கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ரவி செய்தியாளர்களிடம் கூறுகையில், "தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் அரைஸ் ஸ்டீல் நிறுவன உதவியுடன் நடக்கும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 6 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் கலந்து கொள்கின்றன.

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜெயின் பல்கலைக் கழகம் பெங்களூரு, எம்.சி.சி. கல்லூரி சென்னை, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி காஞ்சிபுரம், லயோலா கல்லூரி சென்னை, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம், மார் இவானியஸ் கல்லூரி கேரளா ஆகிய அணிகளும், மகளிர் பிரிவில் எம்.ஓ.பி. கல்லூரி சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரி சென்னை, புனித ஜோசப் கல்லூரி கேரளா, மார் இவானியஸ் கல்லூரி திருவனந்தபுரம், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம், புனித ஜோசப் காலேஜ் ஆஃப் காமர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகளும் கலந்து கொள்கின்றன.

தூத்துக்குடியில் தொடங்கும் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி

போட்டிகள் தூத்துக்குடியில் உள்ள ஜிம்கானா கிளப் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஜூலை 21ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியைத் தொடர்ந்து பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமைச் செயல் அலுவலரும், நிறுவனருமான கே.வி. ராமமூர்த்தி கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார். போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி கூடைப் பந்து கழகம் செய்து வருகிறது" என்றார்.

Intro:தூத்துக்குடியில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி - 17ம் தேதி தொடங்குகிறதுBody:தூத்துக்குடியில் தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி - 17ம் தேதி தொடங்குகிறது

தூத்துக்குடி

தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி சுழற்கோப்பைக்கான தேசிய அளவில் கல்லூரிகளுக்கு இடையேயான கூடைப்பந்து போட்டி தூத்துக்குடியில் வருகிற 17-ஆம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடக்கிறது.

இதுதொடர்பாக கூடைப்பந்து கழகத்தகன் ஒருங்கிணைப்பாளர் ரவி செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,
தூத்துக்குடி மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் அரைஸ் ஸ்டீல் நிறுவன உதவியுடன் நடக்கும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 6 அணிகளும், பெண்கள் பிரிவில் 6 அணிகளும் கலந்து கொள்கின்றன. தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜெயின் பல்கலைக் கழகம் பெங்களூரு, எம்.சி.சி. கல்லூரி சென்னை, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி காஞ்சிபுரம், லயோலா கல்லூரி சென்னை, இந்துஸ்தான் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம் மற்றும் மார் இவானியஸ் கல்லூரி கேரளா ஆகிய அணிகளும் மகளிர் பிரிவில் எம்.ஓ.பி. கல்லூரி சென்னை, எத்திராஜ் மகளிர் கல்லூரி சென்னை, புனித ஜோசப் கல்லூரி கேரளா, மார் இவானியஸ் கல்லூரி திருவனந்தபுரம், இந்துஸ்தான் பல்கலைக்கழகம் காஞ்சிபுரம், மற்றும் புனித ஜோசப் காலேஜ் ஆஃப் காமர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் கலந்து கொள்கின்றன. போட்டிகள் தூத்துக்குடியில் உள்ள ஜிம்கானா கிளப் மைதானத்தில் நடக்கிறது. வருகிற 21ம் தேதி இறுதிப் போட்டி நடக்கிறது. இதைத் தொடர்ந்து நடைபெறும் பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமைச் செயல் அதிகாரியும் நிறுவனருமான கே.வி. ராமமூர்த்தி கலந்துகொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்குகிறார். போட்டிக்கான ஏற்பாடுகளை தூத்துக்குடி கூடைப் பந்து கழகம் செய்து வருகிறது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.