தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திலிருந்து சென்னைக்கு செல்லும் இண்டிகோ விமானத்தில் போலி பயணச்சீட்டு மூலம் பயணம் செய்ய முயன்ற இளைஞரை இண்டிகோ விமான ஊழியர்கள் சந்தேகித்து சோதனை செய்ததில், அவர் போலி பயணச்சீட்டில் பயணிக்க முயன்றது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அங்கு பணியிலிருந்த காவலர்கள் புதுக்கோட்டை காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்க, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விசாரணை செய்தபோது அவர், தூத்துக்குடி பசுவந்தனை பகுதியில் வசித்துவருவது தெரியவந்தது.
இவர் விமானத்தில் செல்லும் ஆசையில் போலி பயணச்சீட்டை தயார் செய்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து புதுக்கோட்டை காவல் துறையினர் அவரை திருட்டுத்தனமாக விமானத்தில் செல்ல முயன்ற குற்றத்திற்காக கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: Syria: துருக்கிக்கு வழிவிடும் அமெரிக்கா...பீதியில் குர்து போராளிகள்!