திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியுவின் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த, ஆர்ப்பாட்டத்தின்போது தமிழ்நாடு முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்த OHD ஆபரேட்டர்களுக்கு நான்கு ஆயிரம் ரூபாய், தூய்மைக் காவலர்களுக்கு மூன்று ஆயிரத்து 500 ரூபாய் என சம்பளத்துக்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும், உள்ளாட்சித் துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கரோனா பரிசோதனை, பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிட வேண்டும்.
கரோனா பாதித்த தொழிலாளர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய விடுப்பு, இரண்டு லட்சம் ரூபாய் நிவாரண நிதியும் வழங்க வேண்டும், கரோனா நேரத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியூ சங்கத்தின் உறுப்பினர்கள் 50-க்கும் மேற்ப்பட்டோர் கலந்து கொண்டு மாநில அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.