ETV Bharat / state

'மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் கிராமப்புற பெண்களுக்கு கந்து வட்டி கொடுமை'

திருவாரூர்: கிராமப்புற பெண்கள் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் கந்து வட்டி கொடுமையைச் சந்தித்துவருவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை என பி.ஆர். பாண்டியன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பி ஆர் பாண்டியன்
பி ஆர் பாண்டியன்
author img

By

Published : Jul 11, 2020, 4:17 PM IST

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ”தமிழ்நாடு முழுவதும் கரோனா பாதிப்பால் உற்பத்தி பொருள்கள் விற்பனை செய்ய முடியாமல் அழிந்துவருகின்றன. பருத்தி, காய்கறி, பழ வகைகளுக்கு உரிய விலை கிடைக்காததால் விற்பனை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் கிராமப்புற பொருளாதாரம் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்களிடம் பண புழக்கமின்றி முடங்கியுள்ளனர். மளிகைக் கடைகள், வணிக நிறுவனங்கள் வியாபாரமின்றி பரிதவிக்கின்றனர். இந்நிலையில், 20 பேர் கொண்ட மகளிர் குழுக்களிடம் கிராம விடியல், L&T போன்ற பல்வேறு நிதி நிறுவனங்கள் மைக்ரோ பைனான்ஸ் என்ற பெயரில் குழுக் கடன்கள் வழங்கியுள்ளனர்.

அவ்வாறு கடன் பெற்றவர்கள் வருமானம் இல்லாததால் திரும்பச் செலுத்த முடியவில்லை. இதனால் கடன் வசூல் என்ற பெயரில் குடும்பப் பெண்களை அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்தும் நடவடிக்கையில் நிதி நிறுவனங்கள் கிராமப்புறங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வெளியில் சொல்ல முடியாமல் மனமுடைந்து முடங்கிக் கிடக்கின்றனர். மேலும் பல்வேறு முறைகேடுகளிலும் நிதி நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுவருகின்றனர்.

குறிப்பாக திருவாரூர் மாவட்டம் இருள்நீக்கி கிராமத்தைச் சேர்ந்த சத்யா என்ற பெண்மணி விடியல் நிதி நிறுவனத்தில் ஏப்ரல் மாதம் 80 ஆயிரம் ரூபாயை மளிகைக் கடை நடத்த கடன் பெற்று, மளிகைப் பொருள்கள் வாங்கி கடை நடத்திவந்துள்ளார். அக்கடனுக்குக் காப்பீடு செய்ய விடியல் நிறுவனம் மூலம் பிரீமியமும் செலுத்தியுள்ளார்.

இந்நிலையில், திடீரென ஜூலை 6ஆம் தேதி கடை தீப்பற்றி எரிந்து நாசமாகி விட்டது. தற்போது காப்பீட்டிக்கான இழப்பீடு பெற்றுத்தரக் கேட்டால், நாங்கள் கடைக்கு காப்பீடு செலுத்தவில்லையென்றும், தனிநபர் காப்பீடு மட்டுமே செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் ஒன்றும் அறியாத பெண்களிடம் ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களுக்கு முரணாக மோசடி செயலிலும் ஈடுபட்டுள்ளது தெரியவருகிறது.

இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர்களிடம் முறையிட்டால் எங்களுக்கு அதிகாரமில்லை என கைவிரிக்கின்றனர். மாவட்ட ஆட்சியர்களிடம் கூறியும் பலனில்லை. எனவே தமிழ்நாடு அரசு மாவட்டந்தோறும் சிறப்பு விசாரனைக் குழுக்கள் அமைத்து, கிராம விடியல் போன்ற மோசடி நிதி நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து கந்து வட்டி கொடுமையிலிருந்து கிராமப்புற பெண்களைப் பாதுகாத்திட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.