சென்னையை சேர்ந்த ஸ்ரீபால் என்பவர் குடும்பத்தோடு திருவண்ணாமலை மின் நகரில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு காரில் வந்துள்ளார். இவருடன் அதே காரில் ஸ்ரீபாலின் மனைவி பிரியா, சதீஷ், சாந்தி, குழந்தைகள் மிருதுளா, ஆர்யா ஆகியோர் வந்துள்ளனர்.
திருவண்ணாமலை அடுத்த ஊசாம்பாடி அருகே வந்தபோது திருவண்ணாமலையிலிருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பேருந்து, கார் மீது நேருக்கு நேர் மோதியுள்ளது. இந்த விபத்தில் காரில் வந்த ஸ்ரீபால், பிரியா, சாந்தி ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். படுகாயமடைந்த சதீஷ், குழந்தைகள் மிருதுளா, ஆர்யா ஆகிய 3 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டார். விபத்து குறித்து திருவண்ணாமலை தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அரசு பேருந்து கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 40க்கும் மேற்பட்டவர்கள் சிறுகாயங்களுடன் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதையும் படிங்க:செப்டிக் டேங்க்கை சுத்தம் செய்த மூவர் விஷவாயு தாக்கி உயிரிழப்பு!