ETV Bharat / state

காவல் நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து மூதாட்டி படுகாயம்!

author img

By

Published : Apr 27, 2019, 10:50 AM IST

திருவள்ளூர்: அம்பத்தூர் மகளிர் காவல் நிலைய மேற்கூரை திடீரென இடிந்து விழுந்ததில் மூதாட்டி ஒருவர் படுகாயம் அடைந்தார்.

விபத்தில் மூதாட்டி படுகாயம்

அம்பத்தூர் காவல்நிலைய வளாகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம், மதுவிலக்குப் பிரிவுக்கான காவல் நிலையம் ஆகியவை உள்ளன. இதில் அனைத்து மகளிர் காவல் நிலையக் கட்டடம், 30 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இரண்டு அறைகள் கொண்ட கட்டடத்தில் காவல்நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கட்டடத்தில் ஆங்காங்கே விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், அடிக்கடி மேற்கூறையில் இருந்து சிமெண்ட் பூச்சு உடைந்து விழுந்து, பெண் காவலர்கள் காயம் அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. ஜன்னல்கள், ஸ்விட்ச் பாக்ஸ், கதவுகள் உடைந்த நிலையில் உள்ளன. இவ்வாறு ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டித்தர வேண்டுமென கோரிக்கை வைத்தும் நடவடிக்கை எடுக்கவில்லையென கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று காலை பெரும்பாலான காவலர்கள், கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிக்கு பாதுகாப்புப் பணிக்குச் சென்று விட்ட நிலையில், ஒரு பெண் காவலர் மட்டும் காவல் நிலையத்தில் பணியில் இருந்துள்ளார். அப்போது, பிரேமா என்ற 60 வயது மூதாட்டி, புகார் அளிக்க வந்தபோது, திடீரென்று கட்டட மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. இதில், பிரேமா தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. பக்கத்து காவல் நிலைய காவலர்கள், மூதாட்டியை மீட்டு, அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தலையில் ஆறு தையல்கள் போடப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திருவள்ளுர்
ஆவடி ஆ.கார்த்திக்

அம்பத்தூர் மகளிர் காவல் நிலைய மேற்குறை விழிந்து ஏற்பட்ட விபத்தில் மூதாட்டி ஒருவர் படுகாயம் அடைந்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அம்பத்தூர் போலீஸ் நிலைய வளாகத்தில் அம்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையம், மதுவிலக்கு பிரிவு போலீஸ் நிலையம் ஆகியவை அமைந்துள்ளது. இதில் மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு எஸ்.ஐ, 15 பெண் காவலர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த போலீஸ் நிலைய கட்டிடம், இரண்டு அறைகள் கொண்ட மிகவும் சிறிய கட்டிடம் ஆகும்.  மேலும், இந்த கட்டிடம் கட்டி சுமார் 30 ஆண்டுகள் ஆகிறது. இதனால், இந்த கட்டிடத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த காவல் நிலைய கட்டிடத்தின்  மேற்பகுதியில் உள்ள சிமெண்ட் பூச்சு அடிக்கடி உடைந்து விழுந்துள்ளது. அப்போதெல்லாம், சில சமயங்களில் பணியில் இருக்கும் பெண் காவலர்கள் காயம் அடைவது உண்டு. மேலும், ஜன்னல்கள், ஸ்விட்ச் பாக்ஸ், கதவுகள் உடைந்து கிடக்கின்றன. மேலும், மழைக்காலங்களில் கன மழை பெய்தால் கட்டிடத்தில் விரிசல் வழியாக தண்ணீர் ஊறி வரும். இதன் காரணமாக போலீஸ் நிலையத்தில் மேஜை மீது உள்ள பதிவேடுகள் நனைந்து பாழாகி விடும். இவ்வாறு எந்த அடிப்படை வசதியும் இல்லாத இந்த கட்டடத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலமுறை காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு புகார் எழுதி வந்துள்ளனர். இந்நிலையில் காலை பெரும்பாலான  போலீசார்  கிரிக்கெட் விளையாட்டு பாதுகாப்புக்கு சென்றுவிட்டனர். பெண் போலீசார் பணியாற்றும் அறையில் மதியம் வேளையில் ஒரு பெண் போலீஸ் மற்றும் மூதாட்டி பிரேமா (60) இருந்துள்ளனர். அப்போது திடீரென்று கட்டிடத்தின் மேற்கூரை ஒரு பகுதி இடிந்து கீழே விழுந்தது. இதை பார்த்த பெண் போலீஸ் ஒருவர் அங்கிருந்து தலை தெறிக்க வெளியே ஓடி வந்தார். ஆனால் வெளியே வர முயன்ற பிரேமா மீது கட்டிடத்தின் இடிபாடுகள் விழுந்தது. இதில், அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினார். இதை பார்த்த, அருகில் இருந்த சட்டம் ஒழுங்கு போலீசார் விரைந்து வந்தனர். பின்னர், போலீசார் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த மூதாட்டியை காப்பாற்றி அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு டாக்டர்கள் பிரேமாவுக்கு தலையில் ஆறு தையல்கள் போட்டுள்ளனர். மேலும், அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  இச்சம்பவம் அம்பத்தூர் காவல் நிலைய வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.