திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் ஒன்றியம், புதுமாவிலங்கை அகரம் சன் சிட்டி பகுதியில் வசித்துவந்தவர் ரோஸ்(70). துணை ஆட்சியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.
இவர் தற்பொழுது திருவள்ளூரில் உள்ள இந்தியன் ஆயில் நிறுவனம் லிமிடெட்டில் நிலம் கையகப்படுத்தும் பிரிவில் பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் தினமும் காலை கடம்பத்தூர் அகரம் பகுதியிலிருந்து திருவள்ளூருக்குப் பணி நிமித்தமாக, இருசக்கர வாகனத்தில் வந்து செல்வதை ரோஸ் வழக்கமாகக் கொண்டிருந்தார். நேற்று பணி முடிந்து மாலை 6.30 மணி அளவில் திருவள்ளூர் தலைமை தபால் நிலையம் அருகே வந்தபோது டிப்பர் லாரி, ரோஸின் இருசக்கர வாகனம் மீது உரசியதில், லாரியின் டயர் ரோஸ் மீது ஏறி ரோஸ், படுகாயம் அடைந்தார்.
பின்னர் அவரை மீட்ட பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸில் திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்படாததால் இரவு 10 மணிக்கு முன்னாள் துணை ஆட்சியர் ரோஸ் உயிரிழந்தார்.
சிசிடிவி காட்சி வெளியானது!
இந்த நிலையில் முன்னாள் துணை ஆட்சியர் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் மீது டிப்பர் லாரி உரசும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க:உள்ளாடைக்குள் மறைத்து வைத்திருந்த 1.20 கோடி மதிப்புடைய 2.76 கிலோ தங்கப்பசை கடத்தல்