திருவள்ளூர் மாவட்டம் எளாவூர் ஒருங்கிணைந்த நவீன சோதனை சாவடியில் போக்குவரத்து துறைமுதன்மைச் செயலர் ஜவஹர் ஆய்வு மேற்கொண்டார். அதில், அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் எவ்வாறு பொருத்தப்பட்டுள்ளது, வனத்துறை, காவல்துறை, சுகாதாரம் உள்ளிட்ட எட்டு துறைகள் சார்ந்த அலுவலகங்களுக்கு போதிய பணியாளர்களை நியமிப்பதின் செயல்பாடு, வாகனச் சோதனைகள் எவ்வாறு நடைபெறுகிறது என்பது குறித்து போக்குவரத்துத் துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஸ்கேனிங் வசதி மூலம் வாகன சோதனை செய்யும் வசதி தமிழ்நாடு முழுவதும் எங்கும் கிடையாது. அதைக் கொண்டுவர முயற்சி மேற்கொண்டு வருகிறோம். நவீன சோதனை சாவடி அமைக்கப்பட்டு அதன் காரணமாக 64 கோடி ரூபாய் 18 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது” எனத் தகவல் தெரிவித்தார்.
இதையும் படிங்க...ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தொடரும் மாணவர்கள் போராட்டம்!