ETV Bharat / state

திருவள்ளூரில் தொற்று இருக்கும் பகுதிகளுக்கு வரும் வாகனங்கள் பறிமுதல்

author img

By

Published : Apr 26, 2020, 9:23 AM IST

Updated : Apr 26, 2020, 5:15 PM IST

திருவள்ளுர்: தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவை ஏப்ரல் 26ஆம் தேதிமுதல் 29ஆம் தேதிவரை கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில் திருவள்ளூரில் கரோனா பாதிக்கப்பட்டப் பகுதிகளுக்கு வரும் வாகனங்களைக் காவல் துறையினர் பறிமுதல் செய்துவருகின்றனர்.

thorough lockdown in tiruvallur tamil news

தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இதுவரை 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு ஏப்ரல் 26 முதல் 29 வரை கடுமையான ஊரடங்கு உத்தரவை அமல்படுத்ததப்பட்டுள்ளதாக உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 52 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் மீஞ்சூர், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி ஒன்றியங்களில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நகரத்தில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஐயப்பன் கடம்பத்தூர் ஒன்றியத்தில் இரண்டு பேர் பாதிக்கப்பட்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

மாவட்டத்தில் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் காவல் துறையினர், சுகாதாரத் துறையினர் கடைகளை அடைத்து அதன் மேல் இரும்புத் தகடுகளைப் பதித்து முழுமையாகச் சீல்வைத்துள்ளனர். மக்கள் நடமாட்டத்தைத் தடுக்கும்வகையில் காவல் துறையினர் முக்கியச் சாலை சந்திப்புகளில் வரும் வாகன ஓட்டிகளைத் தடுத்துநிறுத்தி அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து வாகனங்களைப் பறிமுதல்செய்கின்றனர்.

திருவள்ளூரில் முழு ஊரடங்கு

இதுவரை 8000 மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல்செய்யப்பட்டுள்ள நிலையில் பொன்னேரி, மீஞ்சூர், பூந்தமல்லி, திருமழிசை, திருநின்றவூர் உள்ளிட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவை மக்கள் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று காவல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதையும் படிங்க... திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் முழு ஊரடங்கு உத்தரவு!

Last Updated : Apr 26, 2020, 5:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.