இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டிருக்கும்அறிவிப்பில், 'பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக வரும் ஜனவரி 10ஆம் தேதி அனைத்து ரேஷன் கடைகளும் வழக்கம்போல் செயல்படும். ஜனவரி 10ஆம் தேதி ரேஷன் கடைகள் செயல்படுவதால் அதற்கு பதிலாக வரும் ஜனவரி 16ஆம் தேதி வியாழக்கிழமை அன்று ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜனவரி 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை மூன்று நாட்கள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பொங்கலுக்குத் தயாராகும் கரும்புகள்!