திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக தேர்தல் பணிமனையை சட்டமன்ற உறுப்பினர் பலராமன் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது பாஜக, தேமுதிக, தமாகா, பாமக உள்ளிட்ட கட்சியினரும் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் பேசுகையில்,
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் டாக்டர் வேணுகோபாலுக்கு ஆதரவாக நாளை திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணி, தாமரைப்பாக்கம், பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் முதலமைச்சர் பழனிசாமி பிராச்சாரத்தில ஈடுபடவுள்ளார். அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இரண்டாம் கட்டமாக பரப்புரையில் மேற்கொள்ள உள்ளார்.
வேட்பாளர் டாக்டர் வேணுகோபாலுக்கு ஆதரவாக திரளான கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்தார்.