ETV Bharat / state

வெள்ளை சிரிப்புடன் கலைஞர்; ஆசையோடு புகைப்படம் எடுத்த ஸ்டாலின்!

திருவள்ளூர்: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் வெண்கலச் சிலை செய்யும் பணிகளை திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக பார்வையிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

stal
author img

By

Published : Jun 5, 2019, 10:58 PM IST

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புதுப்பட்டு பகுதியில் முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதிக்கு 5 அடியில் வெண்கலச் சிலை செய்யப்பட்டு வருகிறது. முரசொலி அலுவலகத்தில் வைப்பதற்காக கடந்த இரு மாதங்களாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 8 அடியில் கருணாநிதி நின்ற நிலையிலான சிலை செய்யப்பட்டு, அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சிலை செய்யும் பணிகள் வேகமாக நடந்து வருகிறது.

இதனை திமுக தலைவர் ஸ்டாலின் இன்று இரண்டாவது முறையாக பார்வையிட்டார். களிமண்ணால் ஆன சிலையை ஏற்கனவே பார்வையிட்ட ஸ்டாலின் பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்படும் இந்த சிலையை இரண்டாவது முறையாக இன்று பார்வையிட்டார். அப்போது சிலையின் அருகில் இருந்து வடிவமைப்பு பணிகளை கவனித்த ஸ்டாலின், சிற்பி தீனதயாளனிடம் சிறு சிறு திருத்தங்களை செய்ய சொன்னார்.

சிலையை பார்வையிடும் ஸ்டாலின்

பின்னர் கருணாநிதியின் சிலையை தன்னுடைய செல்போனில் படம் பிடித்தார். அதன்பின் சிலை செய்யும் பணியில் ஈடுபட்டவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலையை விரைந்து முடிக்கவும், திருத்தங்கள் ஏதும் இல்லாத வண்ணம் செய்யுமாறு ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின்போது ஆ.ராசா, முரசொலி செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். வெண்கலத்தினால் செய்யப்படும் இச்சிலை வரும் ஆகஸ்ட் 7ஆம் தேதி முரசொலி அலுவலகத்தில் வைக்கப்படும் என கூறப்படுகிறது.

Intro:கருணாநிதியின் சிலை செய்யும் பணிகளை திமுக தலைவர் ஸ்டாலின் இரண்டாவது முறையாக பார்வையிட்டார். சிறுசிறு திருத்தங்களைச் செய்ய சொன்ன ஸ்டாலின், கருணாநிதியின் சிலையை புகைப்படம் எடுத்தார்.

Body:திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த புதுப்பட்டு பகுதியில் முன்னாள் முதல்வரும், முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதியின் 5 அடியில் சிலை செய்யப்பட்டு வருகிறது. இதனை திமுக தலைவர் ஸ்டாலின் 2- முறையாக பார்வையிட்டார். முரசொலி அலுவலகத்தில் வைப்பதற்காக கடந்த இரு மாதங்களாக இந்த பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 8 அடியில் கருணாநிதி நின்ற நிலையிலான சிலை செய்யப்பட்டு, அறிவாலயத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சிலை செய்யும் பணிகள் நடந்து வருகிறது. களிமண்ணால் ஆன சிலையை ஏற்கனவே பார்வையிட்ட ஸ்டாலின் பிளாஸ்டர் ஆப் பாரிசால் செய்யப்படும் இந்த சிலையை இரண்டாவது முறையாக இன்று பார்வையிட்டார். அப்போது சிற்பி தீனதயாளனிடம் சிறு சிறு திருத்தங்களை செய்ய சொல்லி அதன் அருகில் இருந்து கவனித்து, பின்னர் கருணாநிதியின் சிலையை தன்னுடைய செல்போனில் படம் பிடித்தார். அதன்பின் சிலை செய்தவர்கள் திமுக தலைவர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சிலையை விரைந்து முடிக்கவும், திருத்தங்கள் இல்லாமல் செய்யவும் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்வின்போது ஆ.ராசா, முரசொலி செல்வம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். வெண்கலத்தினால் செய்யப்படும் சிலை வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முரசொலி அலுவலகத்தில் வைக்கப்படும் என சொல்லப்படுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.