ETV Bharat / state

குடிசை வீட்டில் தீ விபத்து: ரூ.25 ஆயிரம் ரொக்கம் உள்பட ஆவணங்கள் எரிந்து நாசம்! - fire on hut house at gummidipoondi tiruvallur

கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு கிராமத்திலுள்ள குடிசை வீட்டில் ஏற்பட்ட தீவிபத்தில், ரூ.25 ஆயிரம் பணம் உள்பட ஆவணங்கள் எரிந்து நாசமாகின.

fire on hut house at gummidipoondi tiruvallur

author img

By

Published : May 27, 2021, 10:19 AM IST

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டியை அடுத்த பூவலம்பேடு கிராமத்தில் ஏசு (42), சர்மிளா (38) தம்பதி வசித்து வந்தனர். இவர்கள் குடிசை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது, மின்சாரம் தடை ஏற்பட்டது. இதையடுத்து, மண்ணெண்ணை விளக்கை ஏற்றி வைத்து விட்டுக்கு வெளியே வந்து தூங்கினர்.

திடீரென குடிசை வீடு கொழுந்துவிட்டு எரிந்ததால், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஏசு, சர்மிளா தம்பதி தீயை அணைக்க முயற்சித்தனர். இருப்பினும் தீ கட்டுக் கடங்காத காரணத்தால், தேர்வாய் கண்டிகையிலுள்ள தீயணைப்பு படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், தீயை அணைத்தனர்.

இவ்விபத்தில் வீட்டிலிருந்த ரூ.25 ஆயிரம் ரொக்கப் பணம், ஆவணங்கள், அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தும் தீயில் எரிந்து நாசமாகின. இதுகுறித்து ஏசு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: மின் கட்டணம் செலுத்த மேலும் அவகாசம்

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.