17-வது மக்களவைத் தேர்தலில் 352 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றியுள்ள நிலையில், மே 30 ஆம் தேதி மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்க உள்ளார். இந்த வெற்றியை பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில்,
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேருந்து நிலையம் முன்பாக பாஜகவினர் மேள தாளங்கள் முழங்க, தங்களது கட்சி கொடியினை ஏற்றி வைத்து, பட்டாசு வெடித்து ஊர்வலமாக சென்றனர். பின்னர், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் ஜானகிராமன், மாவட்ட பொதுச்செயலாளர் யுகாபதி பத்மநாபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
.