திருவள்ளூரை அடுத்த திருப்பாச்சூர் அருகே சென்ற இருசக்கர வாகனம் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இந்த விபத்தில், இருசக்கர வாகனத்தில் பயணித்த ஜெகதீஷ் (35), அவரது குழந்தைகள் கனிஷ்கா (7), தருண்குமார் (3) ஆகிய மூவரும் உயிரிழந்தனர். குழந்தைகளின் தாய் சங்கீதா (30) திருவள்ளூர் அரசு பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருகிறார்.
தகவலறிந்து வந்த திருவள்ளூர் டிஎஸ்பி துரைபாண்டியன் மற்றும் தாலுகா காவல் ஆய்வாளர் ரஜினிகாந்த் ஆகியோர் உயிரிழந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.
பட்டறைபெருமந்தூர் மணல் குவாரி உரிமையாளர் மற்றும் லாரி ஓட்டுநர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கக்கோரியும் வலியுறுத்தினர். அவர்களை அங்கிருந்து கலைந்து செல்ல காவல் துறையினர் அறிவுறுத்தும்போது இருதரப்பினருக்கிடையிலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதை பதிவு செய்த செய்தியாளரை தடுத்ததாலும் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க:இருசக்கர வாகனம் மீது மோதிய லாரி: 3 பேர் உயிரிழப்பு