ETV Bharat / state

இயற்கை மீது அவ்வளவு காதலா; நெல்லை தேரோட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பெயிண்டர்!

author img

By

Published : Jul 2, 2023, 5:48 PM IST

திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித்தேரோட்டத் திருவிழாவில் பெயிண்டர் ஒருவர் இயற்கை பாதுகாப்பைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நோட்டீஸ் வழங்கினார். இது காண்போரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

நெல்லை தேரோட்டத்தில் நெகிழ்ச்சி ஏற்படுத்திய பெயிண்டர்

நெல்லை தேரோட்டத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பெயிண்டர்

திருநெல்வேலி: தமிழகத்தில் பிரசித்திபெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம் திருவிழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த நெல்லையப்பர் கோயில் பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கி உள்ளது. குறிப்பாக ஆண்டுதோறும் இங்கு பல்வேறு திருவிழாக்கள் நடைபெறும். இருப்பினும் ஆனி மாதம் நடக்கும் தேரோட்டம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது.

அதாவது ஆண்டுக்கு ஒருமுறை ஆனி மாதம் நடைபெறும் திருவிழாவில் மட்டும் தான் நெல்லையப்பர் கோயில் தேர் ஓடும். 450 டன் எடையுடன் 70 அடி உயரம் கொண்ட இக்கோயில் தேர் தமிழ்நாட்டில் மூன்றாவது மிகப்பெரிய தேர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது. எனவே, இன்று நடைபெற்ற தேரோட்டத்தைக் காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். காலை 8 மணி அளவில் அமைச்சர் சேகர்பாபு, சபாநாயகர் அப்பாவு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று தேரோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.

தொடர்ந்து இளைஞர்கள், பெண்கள், முதியவர்கள், குழந்தைகள் எனப் பலர் ஆர்வமுடன் ராட்சத கயிற்றைப் பிடித்து தேரை இழுத்து வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம், புதுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பெயிண்டர் ராமமூர்த்தி என்பவர், இந்நிகழ்வில் பங்கெடுத்து, இயற்கை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் அனைவரையும் திரும்பி பார்க்கச் செய்தது. அதாவது ராமமூர்த்தி பெயிண்டர் வேலை செய்து கொண்டே நேரம் கிடைக்கும்போது இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.

குறிப்பாக, மாறிவரும் நவீன உலகத்தில் இயற்கைப் பல வகைகளில் அழிக்கப்படுவதால் பல்வேறு தீமைகள் உண்டாகிறது. அதைத் தடுக்கும் வகையில், பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சென்று, விழிப்புணர்வு ஏற்படுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டத் திருவிழா நடைபெறுவதை அறிந்த ராமமூர்த்தி, நேற்று இரவு தனது மகளுடன் நெல்லையை நோக்கி கிளம்பி வந்தார்.

அதைத் தொடர்ந்து இன்று காலை தேரோட்டம் தொடங்குவதற்கு முன்பாகவே ரத வீதிகளில் தேரைப் பார்க்க ஆவலாக இருந்த மக்களுக்கு, இயற்கை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நோட்டீஸை வழங்கினார். அதில் வெப்பம் அதிகரிக்கக் காரணம் என்ன, வெப்பத்தைத் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதாவது மண்ணில் இருக்கக்கூடிய தாது பொருட்களை எடுப்பதனால் வெப்பம் அதிகரித்து வருவதாக தனது விழிப்புணர்வு நோட்டீஸில் தெரிவித்துள்ளார்.

வேலை செய்வது மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் இருந்து குறிப்பிட்ட சில தொகையை, தனது விழிப்புணர்வு பணிக்காக ஒதுக்குகிறார். அந்த வகையில் இன்று நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு வரும்போது ராம மூர்த்தி 1500 ரூபாய் செலவு செய்து 800 நோட்டீஸை அச்சடித்து வந்துள்ளார். இதுகுறித்து ராமமூர்த்தி பேசுகையில், “நான் பெயிண்டர் வேலை செய்து வருகிறேன். இயற்கை மீது உள்ள அக்கறையால் இந்த விழிப்புணர்வினை ஏற்படுத்தி வருகிறேன்.

இயற்கை பல வகைகளில் அளிக்கப்பட்டு வருகிறது. தமிழக முதலமைச்சர் மற்றும் உலகத் தலைவர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளேன். அரசு இயற்கையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.

வழக்கமாகப் புகழ்பெற்ற திருநெல்வேலி தேரோட்டத்தைக்காண அண்டை மாவட்டங்கள் மற்றும் பிற வெளி மாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் ஆர்வமுடன் வருவார்கள். அதே சமயம் ராமமூர்த்தி சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து, தனது சொந்த செலவில் இயற்கை மீது விழிப்புணர்வு ஏற்படுத்திய சம்பவம் மக்களிடையே நெகிழ்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: Nellaiappar Temple Car fest 2023: நெல்லையப்பர் கோயில் ஆனித் தேரோட்டம்; காவல்துறை வெளியிட்ட முக்கிய அட்வைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.