நெல்லை மாவட்டம், தென்காசியில் சொத்துவரி உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தென்காசி வர்த்தக சங்கம் சார்பில் இன்று முழு கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.
இதில், வியாபாரிகள், சிறு தொழில் செய்பவர்கள், கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
சொத்து வரி 100 சதவீதமாக உயர்த்தப்பட்டது கண்டித்தும், சொத்து வரியைக் குறைக்க வலியுறுத்தியும் இந்த கடையடைப்பு மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.