ETV Bharat / state

ஒரு மணி நேரத்தில் வழிப்பறி கும்பலை மடக்கிப் பிடித்த காவல் துறையினர்! - ஒருமணி நேரத்தில் கம்பம் போலீசார் அதிரடி

தேனி: கம்பம் அருகே கல்லூரி மாணவனிடம் வழிப்பறி செய்த கும்பலை காவல் துறையினர் ஒரு மணி நேரத்தில் சுற்றி வளைத்துப் பிடித்தனர்.

gang theft arrested
author img

By

Published : Oct 10, 2019, 1:30 PM IST

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை பகுதியைச் சேர்ந்த அப்பாஸ் என்பவரது மகன் சதாம்உசேன் (19). இவர், கம்பம்மெட்டு சாலையில் உள்ள அரபுக்கல்லூரியில் தங்கிப் படித்துவருகிறார். விடுமுறைக்காக வீட்டிற்கு வந்திருந்த சதாம் உசேன், நேற்றிரவு கம்பம் வழியாகக் கல்லூரிக்குச் சென்றுள்ளார்.

வழிப்பறி கும்பலைக் கைது செய்த காவல் துறை

கம்பம் எம்.எஸ்.ஆர். காய்கறி கடை அருகே சென்றபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள், கல்லூரி மாணவர் சதாம் உசேனிடம் வழிப்பறியில் ஈடுபட்டனர். கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடமிருந்த இரண்டாயிரத்து 800 ரூபாய், செல்ஃபோன், பையிலிருந்த துணிகள் ஆகியவற்றை பறித்துச்சென்றுள்ளனர். பணம், செல்ஃபோன், ஆடைகளை பறிகொடுத்த மாணவர் சதாம் உசேன் இச்சம்பவம் குறித்து கம்பம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதனடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், வழிப்பறி கும்பலை கம்பம் பகுதியின் முக்கியமான இடங்களில் தேடிவந்தனர். இந்நிலையில், கம்பம் பேருந்து நிலையத்தில், சந்தேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு கும்பலிடம் காவல் துறையினர் வழிமறித்து விசாரித்தனர். ஆனால், அந்தக் கும்பல் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகத்தின்பேரில் காவல் நிலையம் அழைத்துச்செல்லப்பட்டு, தங்களுக்கே உரித்தான பாணியில் விசாரணை செய்தனர்.

இதில் கல்லூரி மாணவர் சதாம் உசேனிடம் வழிப்பறி செய்ததை அந்தக் கும்பல் ஒப்புக்கொண்டது. இந்தக் கும்பலிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், கம்பம் வாழவந்தான் கோவில் தெருவைச் சேர்ந்த பவுன்துரை மகன் மனோஜ் குமார் (18), சஞ்சய் குமார் (19), ரமேஷ் சஞ்சய் குமார் (19) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து கொள்ளையடித்துச் சென்ற பொருட்களை காவல் துறையினர் கைப்பற்றினர்.

Intro:          கம்பம் அருகே கல்லூரி மாணவரிடம் வழிப்பறி செய்த கும்பல். ஒரு மணி நேரத்தில் சுற்றி வளைத்து பிடித்த காவல்துறையினர்.
Body:         திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறை பகுதியை சேர்ந்த அப்பாஸ் என்பவரது மகன் சதாம்உசேன்(19). இவர் தேனி மாவட்டம் கம்பம் அருகே கம்பம்மெட்டு ரோட்டில் உள்ள அரபுக்கல்லூரியில் தங்கி படித்து வருகின்றார்;. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஊரில் இருந்து திரும்பி கம்பத்தில் உள்ள கல்லூரிக்கு வந்துள்ளார். வரும் வழியில் எம்.எஸ்.ஆர் காய்கறி கடை அருகில் நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த 3பேர் கொண்ட கும்பல் மாணவரிடம் வழிப்பறி செய்துள்ளது.
         மாணவர் சதாம்உசேனை கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த பணம் ரூ.2800 மற்றும் செல்போன், பையில் இருந்த சட்டைகள் ஆகியவற்றை பறித்துச் சென்றுள்ளனர். பின்னர் இது குறித்து கம்பம் வடக்கு காவல்நிலையத்தில் மாணவர் புகார் அளித்தார். அதனடிப்படையில் விசாரணையை துரிதப்படுத்திய காவல்துறையினர் வழிப்பறி கும்பலை கம்பம் பகுதியின் முக்கிய இடங்களில் தேடி வந்துள்ளனர்.
         அதனைத்தொடர்ந்து கம்பம் பேருந்து நிலையத்தில் சந்கேகப்படும்படியாக நின்றிருந்த ஒரு கும்பலிடம் விசாரணை செய்தனர். அக்கும்பல் முன்னுக்குப்பின் முரனாக பதில் அளித்ததால் காவல்நிலையம் அழைத்துவரப்பட்டு போலீசார் பாணியில் விசாரணை நடத்தினர். இதில் கல்லூரி மாணவர் சதாம் உசேனிடம் வழிப்பறி செய்ததை ஒப்புக்கொண்டுள்ளனர்.
         விசாரணையில், கம்பம் வாழவந்தான் கோவில் தெருவைச் சேர்ந்த பவுன்துரை மகன் மனோஜ்குமார்(18), குமார் சஞ்சய் குமார் (19), ரமேஷ் சஞ்சய்குமார்(19) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து கொள்ளையடித்துச் சென்றதில் பணம் ரூ.2500 மற்றும் செல்போன் மேலும் இரண்டு புதிய சட்டைகள் ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர். மேலும் இந்த விசாரணையில், அப்பகுதியில் கஞ்சா விற்று வந்த சிவமாயன் (36) என்பவர் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார்.
Conclusion: இந்த இரு வழக்குகள் சம்பந்தமாக கம்பம் வடக்கு காவல் நிலைய காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.