தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியில் அரசு கள்ளர் மாணவியர் விடுதி செயல்படுகிறது. இந்த விடுதியில் 50 மாணவிகள் தங்கி அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வரும் மாணவிகள் இருவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், "விடுதி காப்பாளர் வீரலதா, சமையலர் நாகம்மாள் ஆகியோர் மாணவிகள் மீது எந்தவித அக்கறையையும் செலுத்துவதில்லை. காப்பாளரோ வாரத்திற்கு ஒரு முறை மட்டும் மொத்தமாக மாணவியர்களின் வருகையை பதிவு செய்கிறார். காவலர் இல்லாததால் இரவு நேரத்தில் சமூக விரோதிகள் சிலர் விடுதியில் நுழைந்து மாணவிகளை மிரட்டிச்செல்கின்றனர். இதன் காரணமாக தற்போது 15 மாணவிகள் மட்டுமே விடுதியில் தங்கியுள்ளனர்.
மேலும், கடந்த நவம்பர் 3ஆம் தேதி மாலை மணி என்பவர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்து 12ஆம் வகுப்பு மாணவியை அடித்து துன்பறுத்தி, வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றுவிட்டார். எப்போதாவது விடுதிக்கு வரும் காப்பாளர் நேற்று வந்து மாணவி கடத்தப்பட்டது சம்பந்தமாக யாரிடமும் சொல்லக்கூடாது என எங்களை மிரட்டி வைக்கிறார். தற்போது வரை கடத்தப்பட்ட மாணவி என்னவானார், என எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே உயிருக்கு அச்சுறுத்தலுடன் அரசு விடுதியில் வசித்து வரும் தங்களுக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையும் படிங்க:
மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை வன்புணர்வு செய்த சிறுவர்கள் - ஏர்வாடியில் நடந்த கொடூரம்!