தேனி மாவட்டம் போடியில் வசிப்பவா் இருளாண்டி. இவரது மனைவி விஜயா. இவர்களுக்கு ஷாலினி, ஜனனி(14) என்று இரு மகள்கள் இருந்தனர். மூத்த மகள் ஷாலினிக்கு திருமணம் ஆகிவிட்டது. இளைய மகள் ஜனனி போடியில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா்.
தாய், தந்தை இருவரும் அடிக்கடி குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. இதனால், ஜனனி மனமுடைந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையல் ஜனனி நேற்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதையடுத்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அங்கு விரைந்த காவலர்கள் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் ஜனனி எழுதிய கடிதத்தையும் கைப்பற்றினா். அதில், ரொம்ப கஷ்டமாக இருக்கு. நான் போகிறேன் அம்மா. இனிமே அப்பா கூட சண்டை போடாத அம்மா என எழுதிருப்பதாக கூறப்படுகிறது.
பெற்றோர்களின் அலட்சிய போக்கால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. இதனால், பெற்றோர் குழந்தைகளை கவனமாக வளர்க்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
தற்கொலை எண்ணங்களைத் தவிருங்கள்...
சொந்தக் காரணங்களாலோ அல்லது மன அழுத்தத்தின் காரணமாகவோ தற்கொலை எண்ணம் தோன்றினால் 104 அல்லது சிநேகா உதவி எண்களை அழையுங்கள்.
சிநேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044-24640050
மாநிலத் தற்கொலை தடுப்பு உதவி எண்: 104
இணைய வழித் தொடர்புக்கு: 022-25521111
மின்னஞ்சல்: help@snehaindia.org
நேரில் தொடர்புகொள்ள:
சிநேகா பவுண்டேஷன் ட்ரஸ்ட்,
11, பூங்கா சாலை (Park view road), ஆர்.ஏ.புரம்,
சென்னை - 600028
இதையும் படிங்க: வாட்ஸ் ஆப்பில் புகைப்படம் அனுப்பிவிட்டு கர்ப்பிணி தற்கொலை!