ETV Bharat / state

அதிமுக மெகா கூட்டணி மாபெரும் வெற்றிபெறும்: சரத்குமார் நம்பிக்கை

தேனி: அதிமுக மெகா கூட்டணி மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் என சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சரத்குமார் தேர்தல் பரப்புரை
author img

By

Published : Apr 11, 2019, 7:56 AM IST

தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டப்பேரவை இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மயில்வேல், தேனி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத்குமார் ஆகியோருக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் தேனியில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.

அவர் பேசுகையில், எம்ஜிஆர், ஜெயலலிதாவின் எண்ணங்களை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது என புகழாரம் சூட்டினார்.

அதிமுக தலைமையிலான மெகா கூட்டணியைச் சந்தர்ப்பவாத கூட்டணி என விமர்சனம் செய்கின்றனர். ஆனால் காங்கிரஸ், திமுக ஆட்சியில்தான் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விரு கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டு நிறைந்துள்ள கட்சிகள் எனக் குற்றஞ்சாட்டினார்.

மேலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஓ.பி.ரவீந்திரநாத் குமார் இளைஞர், பண்பாளர், படித்தவர். மக்களின் பிரச்னைகளை மக்களவையில் பேசக்கூடிய நபராகவும், பொதுமக்களின் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பவராகவும் இருப்பார்.
எனவே அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Intro: அதிமுக தலைமையிலான மொகா கூட்டணி தமிழகத்தில் வெற்றி பெரும்.
அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து தேனியில் பரப்புரை மேற்கொள்ளும் மேற்கொண்ட இது குறித்து முகற் ஙட்ட வினசாரடணைமிலா னிய கிய

Body: தேனி மாவட்டம் பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் மயில் வேல் மற்றும் தேனி பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் ஓபி.ரவீந்திரநாத்குமார் ஆகியோருக்கு ஆதரவாக சமத்துவ மக்கள் கட்சித் தலைவரும், நடிகருமான சரத்குமார் இன்று தேனியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
தேனி பங்களாமேடு பகுதியில்அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்ட சரத்குமார் பேசுகையில், எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர்களின் எண்ணங்களை தற்போதைய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.
எனவேதான் மத்திய ஓர் நிலையான ஆட்சி அமைந்திட அதிமுக தலைமையிலான மெகா கூட்டணி தமிழகத்தில் அமைந்துள்ளது. இதனை சந்தர்ப்பவாத கூட்டணி என்கின்றனர். ஆனால் காங்கிரஸ் மற்றும் திமுக ஆட்சியில் தான் ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளதாக நடைபெற்றதாகவும், இவ்விரு கட்சிகளும் ஊழல் குற்றச்சாட்டு நிறைந்துள்ள கட்சிகள் என குற்றம் சாட்டினார்.
எனவே இந்த கூட்டணியை ஊழல் கூட்டணி என்று குற்றம் சுமத்தினார். மேலும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும்அதிமுக வேட்பாளரான ஒபி.ரவீந்திரநாத் குமார் இளைஞர், பண்பாளர், படித்தவர் தங்களது பகுதி பிரச்சினையை நாடாளுமன்றத்தில் பேசக்கூடிய நபராகவும் பொது மக்களின் பிரச்சினைகளை தீர்வு காண்பவராகவும் இருப்பார்.
எனவே அதிமுக வேட்பாளருக்கு வாக்களியுங்கள் என்று கூறி பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.

Conclusion: தேனியை தொடர்ந்து பழனிசெட்டிபட்டி, போடி, சங்கராபுரம், சின்னமனூர் ஆகிய பகுதிகளில் அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக நடிகர் சரத்குமார் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.