நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிநீர் பிளாஸ்டிக் பாட்டில்களை வனப்பகுதிகள் மற்றும் நீர் நிலைகளில் வீசி செல்வதால் பல்வேறு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் நீலகிரி மாவட்டத்தில் பிளாஸ்டிக் பாட்டில்களை பயன்படுத்த நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களுக்கு தடை விதிக்கபட்டுள்ளதை அடுத்து அம்மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு குடிநீர் கிடைக்கும் விதமாக 68 இடங்களில் தண்ணீர் ஏடிஎம்கள் பொறுத்தபட்டுள்ளன. இந்த திட்டத்தை அம்மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
இந்த தண்ணீர் ஏடிஎம்களில் 5 ரூபாய், 2 ரூபாய், 1 ரூபாய் என நாணயங்களை செலுத்தி குடிநீர் நிரப்பிக் கொள்ள முடியும். நீலகிரி மாவட்டத்திற்கு தடையை மீறி பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை எடுத்து வருவபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.