நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அம்மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா செய்தியாளர்களிடம் கூறியதாவது, “நீலகிரி மாவட்டத்திலிருந்து, டெல்லி நிஜாமுதீன் தப்லீக் ஜமாஅத் கூட்டத்திற்கு சென்று வந்த எட்டு பேரில் நான்கு பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, வைரஸால் பாதிக்கப்பட்ட நான்கு பேரும் கோவையில் உள்ள ஈஎஸ்ஐ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் வசித்த பகுதிகளான உதகையில் உள்ள காந்தள், குன்னூரில் உள்ள ரேலியா காம்பவுண்ட் மற்றும் கோத்தகிரி மார்க்கெட் ஆகிய பகுதியில் உள்ள 19 ஆயிரத்து 753 வீடுகள் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரபட்டு கண்காணிக்கபட்டு வருகின்றனர்” எனக் கூறினார்.
மேலும் பேசிய அவர், 380 மருத்துவ குழுக்கள் தினந்தோறும் கண்காணித்து வருகின்றனர். எனவே நீலகிரி மாவட்ட மக்கள் அச்சபட தேவையில்லை எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பொதுமக்களுக்கு உதவ தன்னார்வலர்கள் - ஆட்சியர்