ETV Bharat / state

50,000க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் பதிவு – தொல்லியல் துறை அலுவலர் தகவல்

author img

By

Published : Sep 25, 2019, 10:49 PM IST

தஞ்சாவூர்: 50,000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொல் பொருட்களை பதிவு செய்துள்ளதாக தொல்லியல்துறை அலுவலர் காயத்ரி தெரிவித்துள்ளார்.

தொல்லியல்துறை அலுவலர் காயத்ரி

தஞ்சை பெரியகோயிலில், விழிப்புணர்வு பிரசாரம், புகைப்பட கண்காட்சி, தொல்லியல்துறை அலுவலர் காயத்ரி தலைமையில் நடைபெற்றது. இதில், தொல்லியல் துறை முதன்மை பராமரிப்பு அலுவலர் சங்கர், தொல்லியல் துறை புலத்தலைவர் ஜெயக்குமார், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொல்லியல்துறை அலுவலர் காயத்ரி

இந்நிகழ்ச்சிக்கு பிறகு தொல்லியல்துறை அலுவலர் காயத்ரி செய்தியாளர்களிடம் பேசுகையில்,100 ஆண்டுகள் பழமையான தொல் பொருட்கள், 75 ஆண்டுகள் பழமையான ஒவியங்கள், கடிதங்கள் ஆகியவற்றை தனி நபரிடம் இருந்தால் அதனை உடனடியாக பதிவு செய்துகொள்ள வேண்டும். பதிவு செய்வதன் மூலம் அந்தப் பொருட்களை நாட்டின் எந்த பகுதிக்கு வேண்டுமானாலும் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியும். அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டுவிடும். இந்தியாவிற்குள்ளாக பிறரிடம் மாற்றம் செய்துக் கொள்ளலாம். வெளிநாடுகளுக்கு எடுத்து செல்ல முடியாது. இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தொல் பொருட்களை பதிவு செய்துள்ளதாக அலுவலர் காயத்ரி கூறினார்.

இதையும் படிங்க: புவிசார் குறியீடு நாயகன் சஞ்சய்காந்திக்கு திருமணம்

Intro:
தஞ்சாவூர்,செப்.25

50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்களை தனி நபர்கள் பதிவு செய்துள்ளனர் – தொல்லியல் துறை அலுவலர் தகவல் இதன் மூலம் அந்தப் பொருட்களை நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியும்.

Body:
இந்திய தொல்லியத்துறையில், பழங்கால பொருட்களை பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு வரும் நிலையில்,இதுவரை தனி நபர்கள் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல் பொருட்களை பதிவு செய்துள்ளனர் என தொல்லியல்துறை அலுவலர் காயத்ரி தெரிவித்துள்ளார்
.
இந்திய தொல்லியல் துறை சார்பில், செப்டம்பர் 13 முதல் 28, வரை 15 நாட்கள் தொல்பொருட்கள் மற்றும் புதையல் சட்டம் 1972 மற்றும் விதி 1973-ன் படி தனிப்பட்ட நபரிடமோ அல்லது நிறுவனத்திடமோ இருக்கும் பழங்கால தொல் பொருட்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமிற்கு ஏற்பாடு செய்துள்ளது.
அதன்படி, தஞ்சை பெரியகோவிலில், விழிப்புணர்வு பிரசாரம் மற்றும் புகைப்பட கண்காட்சி, தொல்லியல்துறை அலுவலர் காயத்ரி தலைமையில் நடைபெற்றது. இதில், தொல்லியல்துறை முதன்மை பராமரிப்பு அலுவலர் சங்கர்,தமிழ்பல்கலைகழக கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் துறை புலத்தலைவர் ஜெயக்குமார், அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
நிகழ்ச்சி பிறகு தொல்லியல்துறை அலுவலர் காயத்ரி கூறியதாவது;

100 ஆண்டுகள் பழமையான தொல் பொருட்கள், 75 ஆண்டுகள் பழமையான ஒவியங்கள்,கடிதங்கள் ஆகியவற்றை தனியாரிடம் இருந்தால் அதனை உடனடியாக பதிவு செய்து கொள்ள வேண்டும். பதிவு செய்வதன் மூலம் அந்தப் பொருட்களை நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பாதுகாப்பாக எடுத்துச் செல்ல முடியும். அதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு விடும். இதனால், இந்தியாவிற்குள்ளாக பிறரிடம் மாற்றம் செய்துக் கொள்ளலாம். வெளிநாடுகளுக்கு எடுத்து செல்ல முடியாது. இதுவரை தனிநபர்களிடம் இருந்த பழங்கால தொல்பொருட்கள், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம் வரும் 27ம் தேதி மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில் நடைபெறுகிறது என்றார்.Conclusion:Tanjore sudhakaran 9976644011
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.