தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நகராட்சி அலுவலகத்துக்கு நாள்தோறும் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பல்வேறு பணிகளுக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் நகராட்சிக்கு வருபவர்கள் மீது கிருமி நாசினி தெளிக்க ஏதுவாக சுரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
இதனை தமிழ்நாடு வேளாண்மைத் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு திறந்து வைத்தார். பின்னர் நகராட்சி ஊழியர்களுக்கு வைரஸ் காய்ச்சலுக்கான கபசுரக் குடிநீரை அமைச்சர் துரைக்கண்ணு வழங்கினார். மேலும் நகராட்சிக்கு வழங்கப்பட்ட கிருமி நாசினி மற்றும் சுகாதாரப் பொருள்களை அவர் பார்வையிட்டார்.
தொடர்ந்து, நகராட்சியில் பணிபுரியும் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகளை அமைச்சர் துரைக்கண்ணு, மற்றும் நகராட்சி ஆணையர் லட்சுமி ஆகியோர் வழங்கினார்கள். இதுபோன்று நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள் மற்றும் புற நோயாளிகள் வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கிருமி நாசினி தெளிக்கும் மூன்று சுரங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: முகக்கவசங்கள் வழங்கி திருமணம் செய்த தஞ்சாவூர் தம்பதி!