தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் கொத்தங்குடி ஊராட்சியில் மூன்றாயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. கடந்த ஒரு மாதமாக ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், தினக்கூலிக்கு வேலைக்கு செல்லும் விவசாய தொழிலாளர்கள் உணவின்றி பட்டினியாக உள்ளனர்.
ஆகவே மத்திய, மாநில அரசுகள் குடும்ப அட்டைக்கு ரூ. 5000 வழங்க வேண்டும், 50 கிலோ அரிசி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாநில குழு உறுப்பினர் நாகராஜன் தலைமையில், ஏராளமான விவசாய தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: உயிரிழந்தவரின் உடலில் இருந்து கரோனா பரவாது'- நடிகர் விவேக்