தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்டத்தில் புதிதாக ரூ. 71.67 கோடியில் 11 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும்,ரூ. 39.59 கோடியில் முடிவுற்ற 36 பணிகளை தொடங்கி வைத்து, பல்வேறு துறைகளின் சார்பில் 8 ஆயிரத்து 357 பயனாளிகளுக்கு ரூ.46.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு, மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ், அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.