இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு ஆலோசனைக் கூட்டம், தஞ்சையில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தலைமையில் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், ”பாஜக என்பது பேராபத்திற்குரிய கட்சி. அக்கட்சி அதிமுகவின் பலவீனத்தை பயன்படுத்தி அதன் தோள் மீது அல்லாமல், தலையில் சவாரி செய்து கொண்டு தமிழகத்தில் தடம் பதிக்க முயற்சிக்கிறது. அதனை தடுத்து நிறுத்துவதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.
தமிழகத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் தான், இந்த அரசியல் போரை முன்னெடுத்துள்ளோம். நடைபெற உள்ள தேர்தலை முழுக்க முழுக்க பணபலத்தை மட்டுமே நம்பி அதிமுக இருக்கிறது. பணத்தின் மூலம் வெற்றி பெற்றுவிடலாம் என்ற கனவில் தான் அவர்கள் உள்ளார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் அதிமுகவை நிராகரிப்பார்கள்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக கூட்டணிக்கு தமிழக மக்கள் முன்னணி ஆதரவு!