ETV Bharat / state

குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வேண்டும் - விக்கிரமராஜா கோரிக்கை

author img

By

Published : Dec 11, 2020, 7:53 PM IST

Updated : Dec 11, 2020, 7:58 PM IST

தென்காசி: குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை உத்தரவை நீக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

vikramaraja
vikramaraja

தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக வருகை தந்த தமிழ்நாடு வணிகர் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தென்காசி வியாபாரிகள் சங்கத்துடன் ஆலோசனை மேற்கொண்டதன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "கரோனா தடை உத்தரவு காரணமாக சுற்றுலா தளமான குற்றாலம் பத்து மாத காலமாக மூடப்பட்டதால், அதனை நம்பியுள்ள வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். குற்றாலத்தில் குளிப்பதற்கான தடை உத்தரவை நீக்கி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும். அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கடைகள் ஏற்கெனவே அடைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடையை நீக்க வேண்டும்

அதற்கான வாடகையை தள்ளுபடி செய்ய வேண்டும் என துறை சார்ந்த அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், மூன்று மாத வாடகை ரத்து செய்யப்படும் என உறுதியளித்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: திமுக ஆயிரங்காலத்து பயிர், யாராலும் அசைக்க முடியாது - ராஜ்ய சபா எம்பி திருச்சி சிவா

Last Updated : Dec 11, 2020, 7:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.