ETV Bharat / state

காய்ச்சல் வந்தால் சுயமருத்துவம் செய்யாதீர்கள்- மருத்துவர் எச்சரிக்கை!

சிவகங்கை: டெங்கு காய்ச்சல் குறித்து பள்ளி மாணவர்களுக்கு நகராட்சி ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மாணவர்களுடன் மருத்துவர்
author img

By

Published : Aug 1, 2019, 5:10 PM IST

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் சண்முகநாதபுரம் சிவக்குமார் , திருவேகம்பத்தூர் முத்துவேல், தொழுநோய் மேற்பார்வையாளர் செல்வம்,செவிலியர் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேவகோட்டை 6ஆவது வார்டு நகராட்சி ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர் முத்துவடிவு டெங்கு விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடம் விளக்கினார். அவர் பேசுகையில், " காய்ச்சல் வந்தால் கடைகளுக்குச் சென்று நீங்களே மாத்திரை வாங்கிப் போட்டு சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள். எந்தவொரு காய்ச்சலாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் குணப்படுத்தக் கூடியதுதான். ஆனால், அதற்குச் சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்." என்று கூறினார்.

விழிப்புணர்வு முகாம்
விழிப்புணர்வு முகாம்

மேலும், நிகழ்வில் டெங்கு அறிகுறிகள் சார்ந்த விழிப்புணர்வு காணொலி திரையிடப்பட்டு மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

Intro:சிவகங்கை ஆனந்த்
ஆக.01

பள்ளி மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு முகாம்!

சிவகங்கை: குணப்படுத்தக்கூடிய காய்ச்சல்தான் டெங்கு என்றும் காய்ச்சல் வந்தால் மருத்துவமனை செல்லுங்கள் என்று அரசு பொது மருத்துவர் பள்ளி மாணவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

Body:சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.

அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர்கள் சண்முகநாதபுரம் சிவக்குமார் ,திருவேகம்பத்துர் முத்துவேல்,தொழுநோய் மேற்பார்வையாளர் செல்வம்,செவிலியர் மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தேவகோட்டை 6வது வார்டு நகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் முத்துவடிவு டெங்கு விழிப்புணர்வு குறித்து மாணவர்களிடம் விளக்கினார். அவர் பேசுகையில்,காய்ச்சல் வந்தால் கடைகளுக்கு சென்று நீங்களே மாத்திரை வாங்கி போட்டு சுய மருத்துவம் செய்து கொள்ளாதீர்கள்.

எந்தவொரு காய்ச்சலாக இருந்தாலும் மருத்துவரின் ஆலோசனை பெற்று மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். டெங்கு காய்ச்சல் குணப்படுத்தக்கூடியதுதான். அதற்கு சரியான நேரத்தில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும் என்று பேசினார்.

Conclusion:நிகழ்வில் டெங்கு அறிகுறிகள் சார்ந்த விழிப்புணர்வு வீடியோ காண்பிக்கப்பட்டது. மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.