ETV Bharat / state

சசிகலாவை சேர்ப்பதும், சேர்க்காததும் அதிமுக உட்கட்சி விவகாரம் - வி.பி.துரைசாமி!

author img

By

Published : Feb 8, 2021, 11:00 PM IST

சேலம்: சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்வதும், இணைக்காததும் முழுக்க முழுக்க அதிமுகவின் உள்கட்சி விவகாரம் என்று தமிழ்நாடு பாஜக துணைத் தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்தார்.

vb duraisamy
vb duraisamy

சேலத்தில் இன்று (பிப்.8) மத்திய அரசு கொண்டு வந்துள்ள நிதிநிலை அறிக்கையின் அம்சங்களை தமிழ்நாட்டு மக்களிடம் கொண்டு சேர்ப்பது தொடர்பான பாஜக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக மாநில துணைத் தலைவர் வி.பி.துரைசாமி, "மத்திய அரசு தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு அதிகப்படியான அளவு திட்டங்களை வழங்கி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதை மக்களிடம் எடுத்துரைக்க உள்ளோம். சசிகலாவை கட்சியில் இணைத்துக் கொள்வதும், இணைக்காததும் முழுக்க முழுக்க அதிமுகவின் உள்கட்சி விவகாரமாகும்.

இது குறித்து கருத்து சொல்வதற்கு ஒன்றுமில்லை. தமிழ்நாட்டில் பாஜக கட்சி வேகமாக வளர்ந்து வருகிறது. பாஜக வலுவாக உள்ள இடங்கள் குறித்து மாவட்டத் தலைவர்களை அழைத்து தலைமையுடன் கலந்து பேசி கட்சியினர் மகிழ்ச்சி அடையும் வகையில் அதிக இடங்களை வாங்குவோம். அதனோடு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியும் பெறுவோம்.

பாஜக உறுப்பினர்கள் தமிழ்நாட்டு மக்களின் உரிமைக்காகவும், நன்மைக்காகவும் உரிமை குரல் எழுப்புவார்கள்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: கொண்ட கொள்கைக்கும், மக்களின் அன்பிற்கும் நான் அடிமை- சசிகலா

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.