ETV Bharat / state

சேலத்தில் குட்கா கடத்தல் - இருவர் கைது

author img

By

Published : Jul 24, 2020, 11:41 AM IST

சேலம்: ஓமலூர் சுங்கச்சாவடியில், பெங்களூருவிலிருந்து கடத்திவரப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பான் மசாலா குட்காவை மாநகர காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.

salem
salem

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள தனியார் சுங்கச் சாவடியில் மாநகர காவல் துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த பொலீரோ வாகனத்தை சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் நிறுத்தி பரிசோதித்ததில், பெங்களூருவிலிருந்து சேலத்திற்கு தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட பான், குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் இருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, வாகனத்தில் உள்ள மூட்டைகளை இறக்கி வைத்து சோதனை நடத்தினர். இதில் 32 வெள்ளை சாக்கு மூட்டைகளில் 30 ஹான்ஸ்கள் கொண்ட ஆயிரத்து 600 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் ரூ. 5 லட்சமாகும்.

கடத்தல் தொடர்பாக, இளம்பிள்ளையைச் சேர்ந்த வீரசப்தகிரி(27), எஸ்.கொல்லப்பட்டியைச் சேர்ந்த கணேஷ்(27) ஆகியோரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்த கருப்பூர் காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: கங்கைகொண்டான் அருகே கிடைத்த மட்பாண்ட ஓடுகள்..அகழ்வாராய்ச்சி செய்ய மக்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.