ETV Bharat / state

மணல் திருட்டு: வீரப்பன் மனைவி முத்துலட்சுமி புகார்!

சேலம்: மேட்டூர் அணையின் நீர் தேக்க பகுதியில் வண்டல் மண் தூர்வாரும் பணியில், வண்டல் மண்ணுக்கு பதிலாக செம்மண் அள்ளப்படுவதை தடுக்கக்கோரி வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

மணல்
author img

By

Published : Aug 8, 2019, 6:44 PM IST

மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் வண்டல் மண் தூர்வாரும் பணியில் வண்டல் மண் அள்ளுவதற்கு பதிலாக செம்மண் மற்றும் மணல் அள்ளப்பட்டுவருகிறது. மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு வாழ்வுரிமைக் கட்சி சார்பில் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முத்துலட்சுமி, ’மேட்டூர் அணையை தூர்வார விவசாயிகள் வண்டல் மண்ணை அள்ளி இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனால் நீர்த்தேக்கப் பகுதிகளில் வண்டல் மண்ணை அள்ளாமல் மணல் மற்றும் செம்மண்ணை கூடுதலாக வெட்டி எடுத்து வெளி மாவட்டங்களில் உள்ள செங்கல் சூளைகளுக்கு அதிக விலைக்கு விற்கிறார்கள். இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆய்வு மேற்கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

வீரப்பன் மனைவி முத்துலட்சுமி செய்தியாளர் சந்திப்பு

மேலும் மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் விரைவில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Intro:மேட்டூர் அணையில் நீர் தேக்க பகுதியில் வண்டல் மண் தூர்வாரும் பணியில் உடல் மண்ணுக்கு பதிலாக செம்மண் மற்றும் மணல் அள்ள படுவதாகவும் இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Body:மேட்டூர் அணையின் நீர்தேக்கப் பகுதியில் வண்டல் மண் தூர்வாரும் பணியில் வண்டல் மண் அள்ளுவதற்கு பதிலாக செம்மண் மற்றும் மணல் அள்ளுவது ஆகும் இதனை மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி புகார் மனு ஒன்றினை தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் சந்தன கடத்தல் வீரப்பன் மனைவி முத்துலட்சுமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் நேரில் சந்தித்து வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முத்துலட்சுமி மேட்டூர் அணையை தூர்வார விவசாயிகள் வண்டல் மண்ணை அள்ளி இலவசமாக பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் நீர்த்தேக்கப் பகுதிகளில் வண்டல் மண்ணை அல்லாமல் மணல் மற்றும் செம்மண் களை அரசு அறிவித்துள்ள அளவை விட கூடுதலாக வெட்டி எடுத்து வெளி மாவட்டங்களில் உள்ள செங்கல் சூளைகளுக்கு அதிக விலைக்கு விற்பதாக தெரிவித்த அவர் இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு ஆய்வு மேற்கொண்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும் மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்கவில்லை எனில் இதனை மக்கள் போராட்டமாக மாற்றுவோம் என அவர் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.