ETV Bharat / state

கறிக்கடை வியாபாரி சரமாரியாக வெட்டிக் கொலை; சேலம் அருகே கொடூரம்!

சேலம்: சேலம் அருகே கறிக்கடை வியாபாரி அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கறிக்கடை வியாபாரி கொலை
author img

By

Published : Apr 13, 2019, 9:43 PM IST

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்தவர் அறிவு என்கின்ற அறிவுச்செல்வன் (34). கறி கடை ஒன்றில் வேலைக்கு சென்று வந்தார். இவர் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி பார்வதியுடன் தகராறு செய்து வந்தார். அதனால், தனது மகன்களான கருணாஸ், கோகுல்ராஜ் ஆகியோரை அழைத்துக்கொண்டு ஆட்டையாம்பட்டியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு பார்வதி அழைத்து சென்று விட்டார்.
இதனால் அறிவுச்செல்வன் தனியே வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை அறிவுச்செல்வன் வீடு திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை திறந்து பார்த்தனர். அங்கு அறிவுச்செல்வன் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், இது குறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆய்வாளர் குலசேகரன் மற்றும் காவலர்கள், அறிவுச்செல்வனின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இதில் உள்ள நான்கு குழுக்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், அறிவு செல்வனுக்கும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்தக் கள்ளக் காதலை விடுமாறு அந்தப் பெண்ணின் உறவினர்கள் அறிவுச்செல்வன் மற்றும் அப்பெண்ணிடம் வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் இருவரும் கள்ளக்காதலை விடவில்லை. பலமுறை கூறியும் அறிவுச்செல்வன் கள்ளக்காதலை கைவிடாததால் அப்பெண்ணின் உறவினர்கள் அறிவுச்செல்வன் கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இந்தக் கொலை தொடர்பாக ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த 4 வாலிபர்களிடம் தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

கறிக்கடை வியாபாரி கொலை

இந்தக் கொலை சம்பவம் ஆட்டையாம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Intro:சேலம் அருகே கறி கடை வியாபாரி அடையாளம் தெரியாத மர்ம கும்பலால் சரமாரியாக வெட்டிக் கொலை.

Body:கள்ளக் காதல் தகராறு முற்றி இரவில் கொலை செய்த கும்பலை பிடிக்க தனிப்படை அமைப்பு.

சேலம் மாவட்ட ஆட்டையாம்பட்டி யைச் சேர்ந்தவர் அறிவு என்கின்ற அறிவுச்செல்வன். 34 வயதான அறிவுச்செல்வன் கறி கடை ஒன்றில் வேலைக்கு சென்று வந்தார். அறிவு செல்வனுக்கு குடிப்பழக்கம் உண்டு இதனால் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை பார்வதியுடன் தகராறு செய்ததால் பார்வதி தனது மகன்கள் கருணாஸ் கோகுல்ராஜ் ஆகியோரை அழைத்துக்கொண்டு ஆட்டையாம்பட்டி அருகே வசிக்கும் அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.

இதனால் அறிவுச்செல்வன் தனியே வசித்து வந்தார். இந்த நிலையில் இன்று அதிகாலை அறிவுச்செல்வன் வீடு திறந்து கிடந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கம் இருந்தவர்கள் கதவை திறந்து பார்த்தனர்.

அங்கு அறிவுச்செல்வன் சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார் இதை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் இந்த கொலை குறித்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தனர் இதன் பேரில் ஆய்வாளர் குலசேகரன் மற்றும் காவலர்கள் விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட அறிவுச்செல்வன் சடலத்தை மீட்டனர்.

பிறகு உடற்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொலையை அறிந்த சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபா கணிகர் கொலையில் துப்பு தொடங்க தனிப்படை அமைத்துள்ளனர். இதில் உள்ள நான்கு குழுக்கள் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் அறிவு செல்வனுக்கும் அவர் வசித்து வரும் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இந்தக் கள்ளக் காதலை விடுமாறு அந்தப் பெண்ணின் உறவினர்கள் அறிவுச்செல்வன் இடமும் அந்த பெண்ணிடமும் வற்புறுத்தி வந்துள்ளனர். ஆனால் இருவரும் கள்ளக்காதலை விடவில்லை.

பலமுறை கூறியும் அறிவுச்செல்வன் கள்ளக்காதலை விடாததால் அந்தப் பெண்ணின் உறவினர்கள் அறிவுச்செல்வன் கொலை செய்து இருக்கலாம் என தெரியவந்து இருக்கிறது.

இந்தக் கொலை தொடர்பாக ஆட்டையாம்பட்டி யைச் சேர்ந்த 4 வாலிபர்களை தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Conclusion:இந்தக் கொலை சம்பவம் ஆட்டையாம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.