சேலம்: ஜலகண்டாபுரத்தில் தூய்மைப் பணியாளர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "சசிகலாவுக்கும் அதிமுகவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் பத்திரிகைகளில்தான் அவர் பேசுவதைப் பெரிய செய்தியாக வெளியிட்டுவருகின்றனர்.
சசிகலா 1996, 2006, 2001 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுகவில் இருந்தார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். வேண்டுமென்றே திட்டமிட்டுத் தவறான செய்தியை சசிகலா பரப்பிவருகிறார். எவ்வளவு பெரிய தவறான செய்தியை அவர் பரப்பினாலும் அதிமுகவை வீழ்த்த முடியாது.
சசிகலா ஏற்கனவே எம்ஜிஆருக்கு ஆலோசனை வழங்கியதாகக் கூறினார். அதேபோல ஜெயலலிதாவுக்கும் ஆலோசனை வழங்கியதாக வேண்டுமென்றே திட்டமிட்டுத் தவறான கருத்தைப் பதிவுசெய்து வருகிறார்” என்றார்.
இதையும் படிங்க: ஆடி மாத திருவிழாக்கள் நடத்த அனுமதி கோரும் தமிழ்நாடு கிராம பூசாரிகள் பேரவை