ராமநாதபுரம் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை முன்பாக சிஏஏவுக்கு எதிராக போராடியவர்கள் மீதான தாக்குதலை கண்டித்து எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்போராட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பைரோஸ் கான் தலைமை வகித்தார். இதில், மத்திய அரசின் அராஜக போக்கை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், டெல்லியில் காவல் துறைக்கு எதிராக துப்பாக்கி நீட்டியவர்களை காவல் துறையினர் தண்டிக்காமல் இருப்பதாகவும் அப்பாவி இஸ்லாமியர்கள் தாக்கப்படுவதை நிறுத்துவதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் எனவும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதையும் படிங்க: 'நிலம் எங்கள் உரிமை... இல்லையேல் தீ குளிப்போம்' - பொதுமக்கள் போராட்டம்