ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் முக்குலத்தோர் புலிப்படை கட்சி நிர்வாகிகள் ஊர் ஊராகச் சென்று, அதிமுகவுக்கு எதிராகத் துண்டுப் பிரதிகளை வழங்கிவருகின்றனர். அதிமுக அரசு தங்களுக்கு இட ஒதுக்கீடு, அரசியலில் உரிய அங்கீகாரம் கொடுக்காமல் புறக்கணித்துவருவதாக, அக்கட்சியின் நிறுவனத் தலைவர் எஸ். கருணாஸ் உத்தரவின்பேரில், அனைத்துத் தொகுதிகளிலும் அதிமுகவிற்கு எதிராகத் தேர்தல் பணியாற்றிவருகின்றனர்.
இந்நிலையில் அதிமுகவை நிராகரிப்போம் என்ற துண்டுப்பிரதிகளை முதுகுளத்தூர் தொகுதி முழுவதும் உள்ள முக்குலத்தோர் மக்கள் வசிக்கும் கிராமங்களில், அக்கட்சியின் நிர்வாகிகள் வழங்கிவருகின்றனர். இதுவரை 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வழங்கப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 4ஆம் தேதி வரை முதுகுளத்தூர் தொகுதியில் உள்ள அனைத்து முக்குலத்தோர் கிராமங்களிலும், அதிமுகவுக்கு எதிரான துண்டுப்பிரதிகள் வழங்கப்படும் என அக்கட்சியின் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் முருகன் தெரிவித்தார்.
இதையும் படிங்க: காடுவெட்டி குருவை மருத்துவ கொலை செய்த ராமதாஸ்! - மகள் அடுக்கும் குற்றச்சாட்டுகள்!