ETV Bharat / state

கடன் தகராறு: அண்ணனுக்கு பதிலாக தம்பியை கடத்திய கும்பல் - ராமநாதபுரம்

ராமநாதபுரம் அருகே கடன் தகராறில் அண்ணனுக்கு பதிலாக தம்பியை கடத்திய கும்பலைச் சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

அண்ணனிடம் கொடுத்த கடனை திருப்பி வாங்குவதற்காக தம்பியை கடத்திய கும்பல் 4 பேர் கைது..!

author img

By

Published : Jul 3, 2022, 9:34 PM IST

ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கலீல் அகமது. இவர் தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் இரண்டாவது மகன் ஷேக்மீரான் சென்னை வடக்கு கடற்கரை அங்கப்பன் நாயக்கன் தெருவில் உள்ள உணவகத்தில் நண்பர்களுடன் உணவு சாப்பிட சென்றுள்ளார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் ஷேக்மீரானை வலுக்கட்டாயமாக இருசக்கர வாகனத்தில் ஏற்றி கடத்திச் சென்றது.

வடக்குகடற்கரை முத்துமாரி செட்டி தெருவில் உள்ள வீட்டில் அடைத்து வைத்துள்ளனர். ஷேக்மீரானின் சகோதரர் நூரூல் ஹக் இந்த கும்பலிடம் ரூபாய் 40 லட்சம் கடன் வாங்கியுள்ளார். அதனை பல மாதங்கள் தராமல் ஏமாற்றி வந்துள்ளார். அதனை வசூலிப்பதற்காக அண்ணனுக்கு பதிலாக தம்பியை கடத்தி கும்பல் மிரட்டியுள்ளனர்.

ஷேக் மீரானின் நண்பர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் வடக்கு கடற்கரை போலீசார் ஷேக்மீரானீன் செல்போன் சிக்னலை வைத்து சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்து ஆறு பேரை போலீசார் மடக்கிப் பிடிக்க முயன்றபோது இருவர் தப்பி ஓடி விட்டனர். ஷேக் மீரான் மீட்ட காவல் துறையினர் மீதமுள்ள 4 பேரை கைது செய்தனர்.

மேலும் அந்த அறையில் இருந்த 40 வெளிநாட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. தப்பியோடிய இருவரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க:220 கிலோ குட்கா கடத்திய நான்கு பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.