உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். அவர்கள் தொலைக்காட்சி, தொலைபேசி, இணையதளம், டிக் டாக் போன்றவற்றைப் பயன்படுத்தி தனது பொழுதை கழித்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி நமது பாரம்பரிய விளையாட்டுகளையும் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஃபாஸ் விக்டர், அசோக், சிவா, விவேக், பாபு டேனியல், ஆண்டனி ஆகியோர் அவரவர் வீட்டிலிருந்தே ஒரு பாடலை தயாரித்து வெளியிட்டுள்ளனர்.
இந்தப் பாடலை பாபு டேனியல் எழுத, சிவா பாடலை பாட, விவேக் தனது மொபைலில் இசையமைக்க, அசோக் படம்பிடிக்க, விக்டர் நடித்து, ஆண்டனி வீடியோவை எடிட் செய்துள்ளார்.
இதுகுறித்து அந்த இளைஞர்கள் கூறுகையில், “ஒவ்வொருவருக்கும் பொழுதுபோக்கு என ஏதேனும் ஒரு வழக்கம் இருக்கிறது. ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பிறகு வீணாக பொழுதைக் கழிக்காமல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏதேனும் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில்தான் கையில் இருந்த கேமராவைக் கொண்டு மொபைலில், தனிமையில் இன்பம் என்ற பாடல் தயாரித்தோம்” என்றனர்.
இதையும் படிங்க...தூய்மைப் பணியாளர்களுக்கு புதிய ஆடைகள் வழங்கிய சேலம் ஆணையர்!