பெரம்பலூர் மாவட்டம் சத்திரமனை கிராமத்தைச் சேர்ந்தவர் செங்கமலை (79). இவரது மனைவி பூஞ்சோலை. இவர் இரவு வீட்டின் கதவை மூட மறந்துதூங்கச் சென்றார். அப்போது வீட்டில் நுழைந்த இரு கொள்ளையர்கள் தூங்கிக் கொண்டிருந்த பூஞ்சோலை கழுத்திலிருந்த ஏழு பவுன் தங்க தாலிக் கொடியை பறித்தனர்.
அப்போது அலறியடித்து எழுந்து பூஞ்சோலை சத்தமிட்டதால் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கொள்ளையர்களை விரட்டிப் பிடிக்க முயன்றனர். ஆனால் கொள்ளையர்கள் தப்பியோடிவிட்டனர்.
இதேபோல மேலப்புலியூர் என்ற கிராமத்தில் நல்லப்பன் என்பவர் தனது மகன் வீட்டிற்குச் சென்றுவிட்டு நான்கு நாட்கள் கழித்து வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு வீட்டில் உள்ள இரண்டு பவுன் நகையை கொள்ளையர்கள் திருடிச் சென்றிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
தொடர்ந்து நடந்த இந்த இரு சம்பவங்கள் குறித்து பெரம்பலூர் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் தொடரும் கொள்ளை சம்பவங்களால் பொதுமக்கள் மிகவும் அச்சமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: பாலியல் புகாரில் கைதான நேபாள முன்னாள் சபாநாயகர் கைது!