கோனேரிகுப்பம் பகுதியில் கல்குவாரி நடத்தி வருபவர் செந்தில் குமார். அதிக பாரம் ஏற்றிச்செல்லும் இவரின் லாரிகளுக்காக, பெரம்பலூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் பால்ராஜ் லஞ்சம் கேட்டுள்ளார். இதுதொடர்பாக செந்தில்குமார் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்தார்.
இந்நிலையில் லஞ்ச ஒழிப்புதுறையினரின் வழிகாட்டுதல்படி, கல்குவாரியில் பணிபுரியும் ஜார்ஜ் பெர்ணாண்டஸ், ஆய்வாளர் பால்ராஜிடம் ரூ. 50 ஆயிரம் பணத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்சஒழிப்பு துறையினர், பால்ராஜை கையும் களவுமான பிடித்து கைது செய்தனர்.
இதையும் படிங்க : ’ஏசி காரில் செல்லும்போது கூட கூவம் நாற்றமடிக்கிறது’ - தலைமை நீதிபதி வேதனை!